துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி திரைக்கு வந்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நஷ்டமடையலாம் என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அப்போது ஒரு ரசிகர் அவரிடத்தில், கோப்ரா படம் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த போது, வருத்தம் தெரிவித்த அஜய் ஞானமுத்து, அடுத்து உங்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்கள் இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து இன்னொரு ரசிகர் கோப்ரா படத்தின் கதையே புரியவில்லை என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அஜய் ஞானமுத்து, குழப்பமான கதை அம்சம் கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் அதுபோன்ற கதையில் இந்த படத்தை எடுத்தேன். ஆனபோதிலும் நீங்கள் கோப்ரா படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாக படத்தின் கதை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என அவருக்கு பதில் கொடுத்துள்ளார்.