துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில் நாக சைதன்யாவை பிரியப் போவதாக சமந்தா கூறிய போது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அதை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சமந்தாவும். நாக சைதன்யாவும் எனக்கு ஒன்றுதான். இப்போது வரை அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பில் இருந்து வருகிறேன். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சமந்தா- நாகசைதன்யா திருமண புகைப்படங்களையும் பகிர்ந்து, நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது. ஆனால் இனி எப்போதும் அது இல்லை. அதனால் ஒரு புதிய கதை புதிய அத்தியாயத்தை துவங்குவோம். உங்கள் அனைவரின் உணர்வுக்கும் நன்றி. அந்த பிரச்சினைகளில் இருந்து நான் வெளிவர நீண்ட காலம் ஆகிவிட்டது. வாழ்க்கை மிகவும் குறுகியது என்று அந்த பதிவில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெரிவித்துள்ளார் .