மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
''அனைத்து குடும்பங்களிலும் இருக்கிற, கோபத்தை மைய கருவாகக் கொண்டு 'சினம்' படம் எடுக்கப்பட்டுள்ளது'' என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. அருண் விஜய்க்கு ஜோடியாக, பாலக் லால்வனி நடித்துள்ளார். இப்படத்தில், அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 16ல், திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில், 'சினம்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில், நடிகர் அருண் விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் அருண்விஜய் கூறுகையில், ''அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தைதான், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அதனையே கதைக் கருவாக கொண்டு, இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர்தான், இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்- இன்ஸ்பெக்டர். அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து, அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை, அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்,'' என்றார்.