சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வருகிறார். அவரின் 61வது படமாக உருவாகும் இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
தற்போது அஜித் தனது குழுவோடு லடாக் பகுதிகளில் பைக்கில் ஊர் சுற்றி வருகிறார். இந்த குழுவில் மஞ்சுவாரியரும் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன. நேற்றுகூட கரடு முரடான சாலையில் பைக்கில் அஜித் ஆற்றைக்கடக்கும் வீடியோ வெளியானது. இந்நிலையில் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற அஜித் அங்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலானது. அஜித் உடன் ராணுவ வீரர்கள் சிலரும் போட்டோ எடுத்து கொண்டனர்.