மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் நாயகியாக சன்னி லியோன் நடிக்கிறார். யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட பலர் நடிக்கிறார்கள். ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார். தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.யுவன் கூறியதாவது: இது ரசிகர்களை முழுக்க முழுக்க மகிழ்விக்கும் படமாக இருக்கும். இதில் புதிய அம்சம் என்ன இருக்கிறது என்று கேட்டால், வரலாற்று பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கிறது. 'காஞ்சனா' சீரிஸ் படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் திகில் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும். அதற்காக திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரமாக ராணி கதாபாத்திரம் வருகிறது. நிறைய ராணி கதைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ராணி சற்று வித்தியாசமாக இருப்பார். ராணி கேரக்டருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. கதை எழுதும் போதும் அவர்தான் என்னுடைய முதல் தேர்வாக இருந்தார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சொன்ன முதல் நிபந்தனை 'எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்' என்றார். அதற்காக நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் நான் கதை சொல்லும்போது ஆர்வத்தோடு ரசித்து கேட்டார். அது மட்டுமல்ல, 'நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்' என்று சொன்னார்.
படப்பிடிப்பில் அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைத்தது. காலையில் 9மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு ஆயத்தமாக வந்து விடுவார். ஒருமுறை கேரவேனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் கேரவேனுக்குள் செல்வார். ஒரு நாளின் துவக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதை பார்க்க முடியும். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்த காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.