இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் இயக்கி உள்ளார் மோகன் ராஜா. அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யதேவும், கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான்கானும் நடித்துள்ளனர். சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. விரைவில் டிரைலர், பாடல்கள் வெளியாக உள்ளது. இப்படம் தசரா பண்டிகையையொட்டி அக்டோபர் 5ம் தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படத்தின் புராமோஷன் வேலைகள் நடைபெறாதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. இந்த நிலையில் நேற்றைய தினம் அப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி. பிரசாத், காட்பாதர் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 5ம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.