சோசியல் மீடியா நெகட்டிவிட்டி... கைவசம் 7 படங்கள்... அண்ணாமலை ரீமேக் : சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பேச்சு | டாப் ஹீரோக்கள் படங்களில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகைகள் | தேவயானி மகள் நாயகியாக நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்' | அஜித்தின் டேர் டெவில் : ஸ்ரீலீலாவுக்கு பதிலாக கயாடு லோஹர் | பெண்களை மையமாக கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சவால்களை சந்திக்கின்றன : ராதிகா ஆப்தே | சமையல் கலைத் துறைக்கு பேரிழப்பு : செப் தாமு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் | மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடியில் கட் அவுட் | ஜெயிலர் 2வில் நீக்கப்பட்ட சந்தானத்தின் காட்சிகள் ஓடிடியில் வெளியாகிறதா? | ஆர்ஆர்ஆர் படத்தை விட 5 முதல் 6 மடங்கு பிரம்மாண்டமானது வாரணாசி என்கிறார் ராஜமவுலி! | வாடிவாசலை தவிர்த்துவிட்டு வேறு படங்களை எடுப்பது ஏன்? : கலைப்புலி தாணு விளக்கம் |

தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. ஒன்று ‛நானே வருவேன்', மற்றொன்று ‛வாத்தி'. இவற்றில் நானே வருவேன் படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது. ஆனால் தேதி இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் இரு மொழி படத்தில் நடித்துள்ளார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் பெயரிட்டுள்ளனர். ஐஸ்வர்ய லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‛வாத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற டிசம்பர் 2ம் தேதி இந்த படம் இரு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.