துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது கதையின் நாயகியாக நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கனா, பூமிகா உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ள அவர் தற்போது நயன்தாரா பாணியில் கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாக தன்னிடத்தில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நயன்தாரா பாணியில் கதை சொல்லுமாறு கேட்டுக் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலும் குடும்ப பின்னணி கொண்ட கதைகளாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார். இதனால் நயன்தாராவை மனதில் கொண்டு கதை ரெடி பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த கதைகளை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.