கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் | ரஜினியின் முதல் படமும், 50வது ஆண்டு 'கூலி' படமும் வெளியாகும் ஒரே தியேட்டர் | நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு | சோதனை அதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு பின் மாஸ்க் கழட்டிய அல்லு அர்ஜுன் ; வைரலாகும் வீடியோ | ஹோட்டலில் 100 பேர் மத்தியில் அழ வைத்து ஆடிசன் செய்தார்கள் ; நடிகை இஷா தல்வார் | அரை சதத்தை தொட்ட மகேஷ் பாபு ; சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் வாழ்த்து |
ஆனந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 555, தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கண்ணீர்விட்டு அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
கடந்த 11ம் தேதி எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி என் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதனுடன் ஒரு வந்த லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்'என கூறி குறுஞ்செய்தி செய்தி அனுப்பினார்கள். இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்பிறகு வெவ்வேறு வெளிநாட்டு நம்பர்களில் இருந்து மர்ம நபர்கள் பேசினார்கள். பணத்தை கட்டாவிட்டால் புகைப்படங்களை மார்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். எனது போனை ஹேக் செய்து அதிலிருந்து என் நண்பர்களின் நம்பர்களை எடுத்து மார்பிங் செய்யப்பட்ட என் படங்களை அனுப்பினார்கள். எனது அப்பா அம்மாவுக்கே அந்த படங்களை அனுப்பினார்கள். நான் எப்படிப்பட்டவள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தயவு செய்து லோன், பரிசு என்ற பெயரில் வரும் எந்த ஆப்பையும் டவுன் லோட் செய்யாதீ்ர்கள், என்னைப்போன்றே நீங்களும் இதில் மாட்டிக் கொண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். இதுகுறித்து நான் ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.