துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற போதிலும், டீசர் குறித்து சில பல விமர்சனங்கள் எழுந்தன.
ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் மிகச் சுமாராக இருக்கிறது, கார்ட்டூன் சேனலில் குழந்தைகள் பார்க்கும் தொடர்கள் போல் உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஹனுமான் தோல் ஆடையை அணிந்திருப்பதும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. மீசையுடன் ராமர் இருக்கும் தோற்றம், தாடியுடன் ராவணன் இருக்கும் தோற்றம் ஆகியவையும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் படக்குழுவினர் சில பத்திரிகையாளர்களுக்கு 3டி வடிவ காட்சிகள் சிலவற்றைக் காட்டியுள்ளனர். 3டியில் அவற்றைப் பார்ப்பதற்கு பெரும் வித்தியாசம் இருக்கிறது என அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இது மாதிரியான அனிமேஷன் கலந்த படங்களை தியேட்டர்களில் 3டி வடிவில் பார்ப்பதுதான் சரியானதாக இருக்கும். டீசர், டிரைலர் ஆகியவற்றை வைத்து படத்தின் தரத்தை விமர்சிக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் ஓம் ராவத் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், டிரைலர் வெளியாகும் போது டீசரில் உள்ள சில குறைகள் சரி செய்யப்படும் என அவர் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.