விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசரை அக்டோபர் இரண்டாம் தேதி அயோத்தியில் வெளியிட்டார்கள். ஆனால் இந்த டீசர் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி சோசியல் மீடியாவில் டிரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தெலுங்கு ஊடகங்களுக்கு ஆதிபுருஷ் படத்தின் 3டி டீசரை திரையிட்டு காண்பித்துள்ளார்கள். ஐதராபாத்தில் உள்ள ஏஎம்பி திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடைபெற்றுள்ளது.
அதையடுத்து மீடியாக்களை சந்தித்த பிரபாஸ், ‛‛ஆதிபுருஷ் படத்தின் 3டி பதிப்பு அபரிமிதமான வரவேற்பு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது படத்தை 3டி இல் பார்த்தது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்திய மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும். அதனால் திரையரங்கில் இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிப்படுத்தும். அதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்றார்.