துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தீபாவளி என்றால் இனிப்பு, பட்டாசுகளுடன் சேர்ந்து புதிய படங்களைப் பார்ப்பதும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்தான். ஒவ்வொரு வருடமும் தங்களது படம் தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள். தீபாவளியின் போது வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.
இந்த வருட தீபாவளியில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களான கார்த்தி நடித்துள்ள 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
கார்த்தி நடித்து இதற்கு முன்பு தீபாவளிக்கு 2013ல் 'அழகுராஜா' , 2016ல் 'காஷ்மோரா', 2019ல் 'கைதி' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. முதலிரண்டு படங்கள் தோல்வியைத் தழுவினாலும், 2019ல் வெளிவந்த 'கைதி' படம் அப்போது போட்டியாக வெளிவந்த விஜய் நடித்த 'பிகில்' படத்துடன் போட்டி போட்டு வெற்றிகரமாக ஓடியது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளியை முன்னிட்டு 'சர்தார்' படம் வெளியாக உள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்து இதுவரையில் தீபாவளிக்கு எந்தப் படமும் வெளியானதில்லை. தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகத்தான் 'ரெமோ, டாக்டர்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம்தான் தீபாவளியை முன்னிட்டு அவர் நடித்த ஒரு படம் வெளியாக உள்ளது. 'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் இயக்கி கடந்த வருடம் வெளிவந்த 'ஜதிரத்னலு' படம் மூலம் அதிகம் பேசப்பட்டவர். இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோரது படங்கள் இல்லாமல் இந்த வருட தீபாவளியில் கார்த்தியும், சிவகார்த்திகேயனும் மட்டுமே போட்டிக் களத்தில் உள்ளனர். கார்த்தி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன், விருமன்' படங்களும், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'டான், டாக்டர்' படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. இருவருமே தங்களது தீபாவளி வெளியீடுகள் மூலம் தொடர் வெற்றியைப் பெறுவார்களா என்பதைத் தெரிந்து கொள்ள பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.