ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா |

முன்னணி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் பெரம்பலூரை சேர்ந்த திவ்யா துரைசாமி. இவர் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் ஹீரோயினாக நடித்த படம் சஞ்சீவன். அந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கிறார். வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே.,யாஷின் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளிவருவது பற்றி திவ்யா துரைசாமி கூறியிருப்பதாவது: செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்குதான் முதலில் கையெழுத்திட்டேன். ஆனால், இப்போதுதான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு தான் ஜெய் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன். ஆனால், அப்படங்கள் முன்பே வெளியாகிவிட்டது. இருப்பினும், சஞ்ஜீவன் படம் எப்போதும் சிறப்பான படம்தான். இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.