ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் பெற்றது. அந்த சாதனை நீண்ட காலம் நிலைக்காமல் இவ்வளவு குறுகிய காலத்திலேயே முறியடிக்கப்படும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'விக்ரம்' படத்தின் வசூல் சாதனையை மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' முறியடித்துள்ளது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. 'விக்ரம்' படத்தின் தமிழக வசூல் 180 கோடி வரை இருந்தது. அந்த வசூலை நேற்று 'பொன்னியின் செல்வன்' முறியடித்து தற்போது 200 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதாம். நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும் வரும் வார வசூலுடன் சேர்த்து 200 கோடியை எளிதில் கடந்துவிடும் என்கிறார்கள்.
அப்படி கடந்தால் தமிழ்த் திரையுலக வரலாற்றில் 'பொன்னியின் செல்வன்' படம் தான் முதன் முதலில் தமிழக வசூலில் 200 கோடியைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெறும்.