ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண் இருவரும். தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபோன்று ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதை தனது கனவாகவே வைத்துள்ளார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்.
இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அரவிந்த் கூறும்போது, “ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இவர்கள் நடிக்க உள்ள படத்திற்கு 'சரண் அர்ஜுன்' என டைட்டிலை கூட ஏற்கனவே நான் முடிவு செய்து, அதை முறைப்படி பதிந்து வைத்து வருடந்தோறும் புதுப்பித்தும் வருகிறேன். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படம் மாஸாக இருக்கும். நிச்சயம் வரும் நாட்களில் இந்த படம் உருவாகியே தீரும்” என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ராம்சரணும் அல்லு அர்ஜுனும் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதேசமயம் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான எவடு என்கிற படத்தில் நடித்து இருந்தார்கள். ஆனால் இருவரும் ஒரு காட்சியில் கூட ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. காரணம் கதைப்படி அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு முக அறுவை சிகிச்சை செய்யும்போது அவருக்கு ராம்சரண் உருவம் கிடைப்பதாகவும் அதன் பிறகு ராம்சரணை வைத்து கதை நகர்வதாகவும் அந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.