மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்தவர் அஸ்மிதா. ஆரம்பத்தில் ஒரு சில சிறிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பின்னர் போதிய வாய்ப்பு கிடைக்காமல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மஸ்காரா... பாடல் மூலம் புகழ்பெற்றதால் மஸ்காரா அஸ்மிதா என்றே அழைக்கப்படுகிறார். ஒரு சில படங்களில் கவர்ச்சி வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் 'ஏ ஸ்டோரி' என்ற வெப் சீரிசில் நாயகியாக நடித்துள்ளார். பப்பி என்கிற ஒரு விலைமாதுவின் வாழ்க்கையை பற்றிய கதைதான் இந்த வெப் சீரீஸ். விலைமாதுவாகவே இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே?. அவளுக்கென்று ஆசாபாசங்கள் இருக்காதா என்ன?. அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் உலகம் என விவரிக்கிறது இந்த பத்து எபிசோட் வெப் சீரீஸ். பாபு தூயவன் இயக்கி உள்ளார். மூவிவுட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.