தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் கடைசியாக உடன்பிறப்பு என்ற படத்தில் நடித்த ஜோதிகா தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் காதல் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா, ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் வியர்வை சொட்ட சொட்ட மிகக் கடுமையான பயிற்சிகளை அவர் செய்துள்ளார். அதோடு தலைகீழாக தொங்கியபடி அவர் செய்துள்ள உடற்பயிற்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஜோதிகா, ‛இந்த பிறந்தநாளை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் எனக்கு நானே பரிசாக அளித்துள்ளேன். என்னுடைய பயிற்சியாளர் மகேஷுக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ள ஜோதிகா, ‛வயது என்னை மாற்றுவதற்கு ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். என் வயதை நான்தான் மாற்றுவேன்' என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.