சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் மினிமம் கியாரண்டி நடிகராக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஜெயசூர்யா. தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016ல் ஜெயசூர்யா கொச்சி கடவந்தரா பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள சிலவன்னூர் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள 3.7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அப்படி ஆக்கிரமித்த இடத்திற்கு இடத்தை சுற்றி தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதேசமயம் அப்போது அந்த வழக்கு விசாரணையின்போது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், அது புறம்போக்கு நிலம் என்றாலும் குழந்தைகள் விளையாடும்போது ஏரிகள் தவறி விழுந்து விடாமல் இருக்கவே சுற்றுச்சுவர் அமைத்தேன் என்றும் அதனால் அதை இடிக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார் ஜெய்சூர்யா.
அப்போதைக்கு நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்பை இடிக்க இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில்தான் அந்த வழக்கு சூடுபிடித்து ஜெயசூர்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.