மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மஹா படத்திற்கு பின் ‛105 நிமிடங்கள், ரவுடி பேபி' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இவற்றில் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் வாலு சந்தர் தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்திற்கு ‛கார்டியன்' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பேய் போன்று மிரட்டும் வேடத்தில் ஹன்சிகா உள்ளார். ஹாரர் கலந்த திரில்லராக இந்த படம் உருவாகிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.