கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்". பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் பக்திப் படம். ராஜா தேசிங்கு இயக்குகிறார். கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, வில்லியாக சோனா படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், இசை பாபு அரவிந்த். படத்தின் படப்பிடிப்பு வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பொள்ளாச்சி, பாலூர், கரூர், ஆவடி மற்றும் சபரிமலை பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. படம் கார்த்திகை 1ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சபரிமலை மேல்சாந்தி வெளியிட்டார்.