படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தனுஷ் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம் இது. இப்படத்தின் டீசர் மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியானது. படத்தின் டீசரைப் பற்றி மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்திருந்தார் தனுஷ்.
அதற்குப் பிறகு 'வாத்தி' படத்தை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கடுத்து வெளியான 'திருச்சிற்றம்பலம், நானே வருவேன்' ஆகிய படங்களைப் பற்றியும், அவர் தற்போது நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தைப் பற்றி மட்டுமே பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு கூட 'வாத்தி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். அதையும் தனுஷ் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார், “வாத்தி' படத்தின் முதல் சிங்கிள் விரைவில்…பாடலை எழுதியது பொயட்டு தனுஷ்…ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு பற்றி நேற்று ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். தான் எழுதிய இந்தப் பாடல் பற்றி கூட தனுஷ் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
இதனிடையே, டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல் பரவியது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படத்தின் பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இருப்பினும் 'வாத்தி' படத்தை தனுஷ் தவிர்ப்பது ஏன் என அவரது ரசிகர்களும் ஆச்சரியத்துடன் உள்ளனர்.