துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தை தொடர்ந்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நேரத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கியுள்ள எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. ஒரு மாறுபட்ட ஆக்சன் கேம் குறித்த கதையை கமலிடத்தில் சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் இப்படம் குறித்த தகவல் துணிவு ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.