தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'.
இரண்டு பாகங்களாக வரும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டுளளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் போட்டோ ஷுட் வேலைகள் ஆரம்பமாகின. அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. முதலில் திரைக்கதை உருவாக்கத்தால் தாமதமானது. தற்போதைய தாமதத்திற்கு திருப்தியான லொகேஷன்கள் கிடைக்கவில்லை என்று தகவல். இதனால், பகத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் தங்களது தேதிகளை மீண்டும் மாற்றித் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2023ல் இரண்டாம் பாகம் வெளியாவது சந்தேகம்தான், 2024 துவக்கத்தில் வேண்டுமானால் வெளியாகலாம்.