தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

எப்.ஐ.ஆர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ‛கட்டா குஸ்தி'. இதனை அவரே தயாரித்தும் உள்ளார். இணை தயாரிப்பாளராக தெலுங்கு நடிகர் ரவிதேஜா இணைந்துள்ளார். படம் தெலுங்கிலும் வெளிவருகிறது. விஷ்ணு விஷால் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கி உள்ளார். விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது: மல்யுத்தம் போன்றதுதான் கட்டா குஸ்தி. மணல் வெளியில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் விளையாட்டு. தமிழ்நாட்டில் சேலம், கோவை, பொள்ளாச்சி பகுதியில் இன்னும் இந்த விளையாட்டுகள் நடந்து வருகிறது. இந்த விளையாட்டின் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. ஆனாலும் இது விளையாட்டு படம் அல்ல. கணவன் மனைவிக்கு இடையிலான ஈகோவை காமெடியாக சொல்லும் படம்.
இந்த படத்தின் கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. சில தயாரிப்பாளர்கள் கதை கேட்டுவிட்டு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்ற தயங்கினர். அதனால் தான் நானே தயாரிக்க முடிவு செய்தேன். படத்தின் கதையை கேட்டுவிட்டு ரவிதேஜாவும் இணைந்து கொண்டார். அவரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டோம். இது விஷ்ணு விஷால் படமாக மட்டும் இருக்கட்டும் என்று மறுத்து விட்டார். அடுத்து நேரடி தெலுங்கு படத்தில் அவரும் நானும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.
என் மனைவிக்கு நான் தெலுங்கில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவரது முயற்சியால்தான் இதுவெல்லாம் நடக்கிறது. இதற்காக தெலுங்கு கற்று வருகிறேன். இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.