ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' |
கோலிவுட் திடீரென பாலிவுட் ஆகிவிட்டதோ என சமீபத்தில் நடந்த இரண்டு 'பார்ட்டிகள்' திரையுலகத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இரண்டு பார்ட்டிகளுமே மிக முக்கியமான பார்ட்டிகள் என்பதுதான் அதற்குக் காரணம்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியைக் கொண்டாட அதன் படக்குழுவினர் கடந்த சனிக்கிழமையன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அந்த நிகழ்வில் கூட படத்தின் சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், அன்று இரவு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற 'பார்ட்டி'யில் மதிய நிகழ்வுக்கு வராத நடிகைகள், நடிகர்கள், மற்ற கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். அதில் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டதுதான் ஹைலைட்டாக இருந்தது. பார்ட்டி புகைப்படங்கள், வீடியோக்கள் ஒரு சில வெளிவந்து வைரலாகப் பரவியது.
அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்களை அழைத்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் அவருக்கு நெருக்கமான பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பிக் பாஸ் போட்டியாளர்களும் அதில் இருந்தனர். நடிகை பிந்து மாதவி கமலுடன் ஆடிய நடன வீடியோவும், பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அடுத்தடுத்து இரண்டு பார்ட்டிகள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய் என இந்திய சினிமா கொண்டாடும் பிரபலங்கள் அதில் பங்கேற்றதால் கோலிவுட் திடீரென பாலிவுட் போல ஆகிவிட்டதா என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.