பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார். சமந்தா நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கில் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. வெளியில் சென்று இப்படத்திற்காக புரமோஷன் செய்ய முடியாது என்பதால் தமிழ், தெலுங்கில் படத் தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யு டியூபில் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு பேட்டியில் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார் சமந்தா. “இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில் ஒரு அடி நடப்பது கூட எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது நான் பல விஷயங்களைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என ஆச்சரியமாகப் பார்ப்பேன். நான் இங்கு போராடவே இருக்கிறேன்.
நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல்தான் இருக்கிறேன். அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில்தான் இருக்கிறேன், ஆனால், அதை எதிர்த்துப் போராடுவேன்,” என மிகவும் எமோஷனலாக கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
சமந்தாவின் பேட்டியை காண : https://www.youtube.com/watch?v=WTGvcFsWbb4