பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய், ராஷ்மிகா மந்தனா இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயக்கிய பேரரசு, விஜய், ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் .
அவர் கூறுகையில், நான் இயக்கிய திருப்பாச்சி படத்தில் விஜய்- திரிஷா ஜோடி சிறப்பாக இருந்தது. அதன் பிறகு நண்பன் படத்திலும் விஜய் -இலியானாவின் ஜோடி பொருத்தமும் அருமையாக இருந்தது. அதன்பிறகு தற்போது வாரிசு படத்தில் விஜய்- ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி பொருத்தமும் மிகச் சிறப்பாக உள்ளது. விஜய்க்கு இணையாக அவரும் ரஞ்சிதமே பாடலில் நடனமாடி இருக்கிறார் . அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக எத்தனையோ ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் அவருக்கு பொருத்தமான ஜோடிகள் என்றால் திரிஷா, இலியானா , ராஷ்மிகா ஆகியோர் தான் என்கிறார் இயக்குனர் பேரரசு.