பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

‛வத்திக்குச்சி' பட இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛டிரைவர் ஜமுனா'. பெண் கால்டாக்ஸி ஓட்டுனரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, ஒரேநாளில் படத்தின் கதை நடப்பது போன்று சஸ்பென்ஸ் நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை (நவ., 11) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டள்ள அறிக்கை : ‛‛நவ., 11ம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் டிரைவர் ஜமுனா படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். மிக விரைவில் படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலா ஆதரவிற்கும், அன்பிற்கும் தலை வணங்குகிறோம்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வெளிவந்த படங்களில் ‛லவ் டுடே, நித்தம் ஒரு வானம்' படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இந்தவாரமும் அந்த படங்கள் தியேட்டர்களில் தொடருகின்றன. நாளை ‛மிரள், யசோதா, பரோல்' ஆகிய படங்களுடன் ‛டிரைவர் ஜமுனா' படமும் வெளி வருவதாக இருந்தது. ஆனால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைத்ததால் டிரைவர் ஜமுனா படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.