மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரித்திகா சிங், தற்போது துல்கர் சல்மான் நடித்துவரும் கிங் ஆப் கோதா என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் அவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே நடனமாடுகிறார். கடந்த சில நாட்களாக இந்தப் பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக இந்த சிறப்பு பாடலுக்கு சமந்தாவை ஆட வைக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபநாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திட்டத்தை மாற்றி அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர்.