கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள திரைப்படம் 'காரி' . சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். வில்லனாகஜேடி சக்கரவர்த்தியும், முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார் , பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவ-25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.