பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சிந்தனை கருத்துக்களால் ரசிகர்களை கவர்ந்த, 'சின்ன கலைவாணர்' விவேக் பிறந்த தினம் இன்று. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியில், அங்கய்யா பாண்டியன் - மணியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1961ல் இதே நாளில் பிறந்தவர் விவேகானந்தன் எனும் விவேக். ஊட்டி கான்வென்டிலும், பின், மதுரை அமெரிக்கன் கல்லுாரியிலும் படித்தார். இசைக்கருவிகள் வாசிப்பது, பரதநாட்டியம் ஆடுவதில் தேர்ந்தவர். கலாகேந்திரா கோவிந்தராஜன் வாயிலாக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு அறிமுகமானார்.
இவரின் நாட்டியம், பலகுரல் திறமையை அறிந்த பாலசந்தர், மனதில் உறுதி வேண்டும் படத்தில் வாய்ப்பளித்தார். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக்கினார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், துாள், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில், நகைச்சுவையால் முத்திரை பதித்தார். 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2021 ஏப்ரல் 16ல் தன் 59வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
சிந்தனை கருத்துக்களால் ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த விவேக் இன்று இல்லையென்றாலும் அவர் தந்த படைப்புகள் என்றும் காலம் முழுக்க பேசும். அதோடு அவர் முன்னெடுத்த மரக்கன்று நடும் பணி இன்னும் பலதலைமுறைக்கும் பயன் தரும்.