மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ரஜினி தற்போது நடித்து வரும் புதிய படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். ரஜினியுடன் பிரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் காட்சிகளை விளக்குகிறார்.
அதுமட்டுமில்லாமல், ஜெயிலர் படம் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் காட்சியும் வெளியாகி உள்ளது. 13 விநாடியே ஓடும் இந்த வீடியோவில் எதுவும் தெளிவாக இல்லை என்ற விமர்சனமும் உருவாகி உள்ளது.