தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு படங்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுகாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஆடிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகிறது.
உச்சிமலை காத்தவராயன் என்பது அந்த ஆல்பத்தின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதில் ஆர்ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர், டோங்லீ இயக்கி உள்ளர். இந்த பாடல் மூலம் ரசிகர்களுக்கு தன்னை மீண்டும் நினைவுபடுத்தும் ஆஸ்னா, இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.