ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழில் 1990ல் வெளிவந்த 'மிஸ்டர் கார்த்திக்' என்ற படத்தில் அறிமுகமானவர் சிவரஞ்சனி. தொடர்ந்து 'தங்க மனசுக்காரன், சின்ன மாப்ளே, பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, அரண்மனைக் காவலன், செந்தமிழ்ச் செல்வன்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கில் ஊஹா என்ற பெயரில் அறிமுகமாகி அங்கும் பல படங்களில் நடித்தார்.
தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்த்தைக் காதலித்து 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ரோஷன், மேதா, ரோஹன் என இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். ரோஷன் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'பெல்லி சன்டாடி' குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
ஸ்ரீகாந்த், சிவரஞ்சனி திருமணம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக சில தெலுங்கு யு டியூப் சேனல்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அவற்றைப் பார்த்து ஸ்ரீகாந்த் தன்னுடைய கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“இப்படியெல்லாம் யார் வதந்திகளைப் பரப்புவது ?. இதற்கு முன்பு நான் இறந்துவிட்டேன் என வதந்தியைப் பரப்பினார்கள். அதனால் எனது குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டார்கள். இப்போது பணச் சிக்கலால் நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளோம் என பரப்பி வருகிறார்கள். அது குறித்து மெசேஜ்களை எனது மனைவி என்னிடம் காட்டினார். அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனச் சொன்னேன். இப்படி ஆதாரமில்லாத பொய்ச் செய்திகளைப் பரப்பும் இணையதளங்கள், யு டியுப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் தற்போது அருணாச்சல கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வந்தபின் இகுறித்து செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள் மீது கேஸ் போடுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.