'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

போலீஸ் கதையை மையமாக கொண்டு விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன் . விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் வெற்றிமாறன்.
மேலும் வெற்றி மாறன் தனது படங்களில் என்கவுன்டர் சம்பந்தப்பட்ட கதைகளை தொடர்ந்து படமாக்குவது குறித்து கூறுகையில், காவல் துறையில் உள்ள குறைகளை மட்டும் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. பொதுவாக மக்கள் மீது ஒரு அமைப்பு ரீதியாக ஒடுக்கு முறைகளை அதிகம் நடத்துவது காவல்துறைதான். ஆகையால் தான் என் படங்களில் அது குறித்த விஷயங்களை அதிகமாக சொல்லி வருகிறேன்.
விசாரணை படத்தில் காவல்துறையின் அடக்குமுறைகள் தான் முழுக்க முழுக்க இடம் பெற்றிருந்தது. அதேபோல் இந்த விடுதலை படமும் காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை களமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற படங்களில் சொல்லப்படாத பல புதிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள வெற்றிமாறன், இந்த விடுதலைப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.