தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது . இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது .
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் . ஆனால் கார்த்திக் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் அவர் சில மாதங்களுக்கு முன்பு முட்டி வலி பிரச்சனையால் சிகிச்சை எடுத்து வருகிறாராம். முழுமையாக இன்னும் சரியாகாத காரணத்தால் விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது .