தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்திருந்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது நடித்துள்ளார் அபிஷேக் பச்சன். இந்நிலையில் அவர் இன்னொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப் போகிறார்.
தமிழில் 2019ம் ஆண்டு மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியான படம் கே டி என்ற கருப்பு துரை. 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவான படம் தான் இது . இந்த படத்தில் 71 வயது முதியவராக மு.ராமசாமி என்பவரும், 8 வயது சிறுவனாக நாகா விஷாலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்ததற்காக சிறுவன் நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து மதுமிதா ரீமேக் செய்யப் போகிறாராம். தமிழில் மு.ராமசாமி நடித்த 71 வயது முதியவர் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.