தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக என்ட்ரி ஆகி உள்ள படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வருகிற 9ம் தேதி படம் வெளிவருவதை தொடர்ந்து படக்குழுவினருடன் இணைந்து வடிவேலு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில் வடிவேலு கூறியிருப்பதாவது: என்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப்பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப திமிரு பிடித்தவன், என்ன ஆட்டம் போடுகிறான் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.
என்னோட படத்தை, காமெடியை மக்கள் ரசிக்கனும், அதற்காக நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு. என்று கூறியுள்ளார்.