மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார். குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் இஸ்மாயில் கூறியதாவது: தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும், பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி. என்கிறார்.