மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுக்க வியப்பையும், வசூலையும் குவித்த படம் ‛அவதார்'. கற்பனைக்கும் எட்டாத புதிய உலகத்தை காண்பித்தார் ஜேம்ஸ் கேமரூன். இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ‛அவதார் தி வே ஆப் வாட்டர்' இன்று(டிச., 16) உலகம் முழுக்க வெளியானது. ரஷ்யாவில் மட்டும் வெளியாகவில்லை.
பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் தயாராகி உள்ளது. உலகம் முழுக்க 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கிரீன்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 3 மணி நேரம் 12 நிமிடம் ஓட உள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் 2 டி, 3டி, ஐ மேக்ஸ் 3டி, 3டி ஸ்கிரீன் எக்ஸ், 4டிஎக்ஸ் 30, ஆகிய வடிவங்களில் திரையிடப்பட உள்ளது. 'ஐ மேக்ஸ் 3 டி' வடிவில் படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வம் காட்டி உள்ளனர்.
இந்த படம் இன்று வெளியானாலும் ஏற்கனவே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகள் திரையிடப்பட்டு விட்டன. அதில் பாசிட்டிவ்வும், நெகட்டிவ்வும் கலந்து விமர்சனங்கள் வருகின்றன. அதேசமயம் படத்தின் பிரமாண்ட காட்சிகள் விஷூவல் டி-ரீட்டாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளன.
‛அவதார் 2' படம் வசூலில் புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.