படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள 'அவதார் 2' படம் கடந்த வாரம் இந்தியாவில் ஆறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. 'அவதார் 2' படம் முதல் பாகத்தைப் போலவே 'மோஷன் கேப்சரிங்' முறையில் படமாக்கப்பட்ட ஒரு படம்.
நிஜ நடிகர்கள் நடிக்க அவர்களது நடிப்பு மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்பட்டு, அவர்களது நிஜ முகம் தெரியாத அளவிற்கு வேறு ஒரு கற்பனை மிகுந்த தோற்றத்தில் அவர்களைக் காட்டுவதுதான் 'அவதார்' படங்களின் படமாக்கம். அந்தப் படத்தைப் போலவே தான் தமிழில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்க இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக 'கோச்சடையான்' படம் தயாராகி வெளிவந்தது. ஆனால், 'கோச்சடையான்' படத்தில் இடம் பெற்ற விஎப்எக்ஸ் காட்சிகள் மிக மிகச் சுமாராக இருந்ததால் அவை வரவேற்பைப் பெறவில்லை.
இப்போது பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க 'ஆதி புருஷ்' என்ற பான் இந்தியா படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி உள்ளார்கள். இப்படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மிக மோசமாக இருந்ததாக கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதனால், இன்னும் சிறப்பாக படத்தை உருவாக்கும் விதத்தில் 2023 ஜனவரி 12ம் தேதி வெளியீட்டிலிருந்து ஜுன் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
'அவதார் 2' படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வியக்கும் அளவிற்கு உள்ளன. முதல் பாகத்தில் தரையில் நடந்த அந்த சாகசக் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் தண்ணீரில் நடக்கிறது. இப்படம் இப்போது வெளிவந்துள்ளதால் அது போன்ற ஒரு எதிர்பார்ப்பு 'ஆதி புருஷ்' படத்திற்கும் இருக்கும். ஆனால், 'அவதார் 2' அளவுக்கெல்லாம் செலவு செய்ய முடியாது. இருப்பினும் 'ஆதி புருஷ்' படத்திற்கு ஒரு சவால் காத்திருக்கிறது என டோலிவுட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.