23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள படம் 'பதான்'. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இது இந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
“பாடலில் இடம்பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டி வரும்” என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரித்துள்ளார். “படத்தை உங்கள் மகளுடன் பார்ப்பீர்களா?” என்று மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் கேள்வி விடுத்துள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பதான் படத்ததுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பீஹார் மாநில பா.ஜ., தலைவர் ஹரி பூஷன் தாக்கூர் "காவியை படத்தில் அவமதித்து உள்ளனர். தீபிகா படுகோனே குட்டை உடை அணிந்து அநாகரிகமாக ஆடி இருக்கிறார். பீஹாரில் தியேட்டர்களில் 'பதான்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார். இரண்டு மாநில மக்களும் படத்திற்கு எதிராக திரும்பி இருப்பதால் இரு மாநிலங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.