பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தி டார்க் நைட் ரைசஸ், இன்டர்ஸ்டெல்லார், இன்செப்ஷன், டன்க்ரிக், டெனட் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் படங்களை புரிந்து கொள்ளவே தனி அறிவு வேண்டும் என்கிற அளவிற்கு புகழ்பெற்றவர். அவரது அடுத்த படம் 'ஓப்பன்ஹெய்மர்'. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். அயர்ன்மேன் புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி டிரண்டிங் ஆகியுள்ளது. அணு சோதனை நடத்தப்படும் கடைசி சில நிமிடங்களே டிரைலரில் இடம்பெற்றுள்ளது. அந்த கடைசி நிமிடத்தில் அணு விஞ்ஞானி காட்டும் கவலையையும், அதிர்ச்சியையும் சிலியன் மர்பி அப்படியே காட்டி உள்ளார். டிரைலர், படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.