பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
ஓம் ஜெயம் தியேட்டர் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'பியூட்டி'. ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து தயாரித்திருக்கிறார் ஆர்.தீபக்குமார். இலக்கியன் இசை அமைத்துள்ளார். கோ.ஆனந்த சிவா இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே 'சைக்கலாஜிகல் லவ் த்ரில்லராக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் தலைமை செயலாளர் இறையன்பு இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற பாடல், காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், இந்தப் பாடல் மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பியூட்டி என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. என்றார்.