துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால் அதன்பிறகு சென்னையில் உள்ள ஆர்.கே. நகரில் நடை நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவில் தவறு உள்ளதாக கூறி அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தார்கள்.
அதன் பிறகு ஆந்திரா மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் அங்குள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டார் விஷால். அதோடு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே தனது கவனம் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை சந்திக்க வருமாறு விஷாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர்களின் சந்திப்பு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து 2024 தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் விஷால் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா அமைச்சராக அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.