பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஹிட்டடித்த 'கேஜிஎப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுரூஷ்' படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மற்றொரு படமான புரொஜெக்ட் கே படப்பிடிப்பும் நடக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் தயாரிக்கவுள்ளார். இந்த படம் வரும் 2024-ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. சுகுமாருடன் பிரபாஸ் கூட்டணி அமைக்கவிருப்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 'புஷ்பா 2' படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.