தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் அறிமுகமாகி பாலிவுட்டில் சாதித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்தவரை மூகமூடி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக்கினார் மிஷ்கின். முகமூடி வெற்றி அடையதாதால் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு பக்கம் போனவர் அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார். பின்னர் இந்தியில் அறிமுகமானவர் அங்கும் முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
மீண்டும் தெலுங்கிற்கு திரும்பி ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார், தமிழுக்கு திரும்பி பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்தார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெறவில்லை. சிரஞ்சீவி நடித்த ஆச்சர்யா படத்தில் நடித்தார், சமீபத்தில் அவர் நடித்த சர்கஸ் படமும் வெளியானது. இந்த படங்களும் வரவேற்பை பெறவில்லை. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்தாலும் பாலிவுட்டில் சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் சொந்தமாக வீடும் வாங்கி விட்டார்.
வீடு வாங்கியது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிறுவயது முதலே சொந்த வீடு வாங்க எனக்கு கனவு இருந்தது. இந்த ஆண்டுதான் அந்த கனவு நிறைவேறியது. மும்பையில் புதுவீடு வாங்கி அதை எனக்கு ஏற்றபடி மாற்றி இருக்கிறேன். தொழில் ரீதியாக நாம் எவ்வளவு மன உளைச்சலோடு இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அது எல்லாம் பறந்து போக வேண்டும். என் வீட்டை அதற்கு ஏற்றவிதமாக அமைத்துக் கொண்டேன்.
வீடு என்பது நம்மை நம்மைப் போலவே இருக்க வைக்கும் ஒரு இடம். இங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளும் நமது சிறப்பு தன்மையை தெரியப்படுத்துவது போல இருக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் எனக்குப் பிடித்த மாதிரி டிசைன் செய்து கொண்டேன். நான் நடிகை என்பதால் எனது படுக்கை அறையில் சினிமாக்களை பார்ப்பதற்கு என்று ஒரு ப்ரொஜெக்டர் வைத்துள்ளேன். சமையல் அறை, ஹால் போன்றவற்றையும் என் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறேன், என்றாகிர் பூஜா.