‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அபர்ணா தாஸ் இதுவரை 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் மாலில் மாட்டிக் கொண்டவர்களில் அமைச்சர் மகளாக நடித்தார். விஜய் படத்தில் நடிப்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என்று கனவு கண்டார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தற்போது 'டாடா' என்ற ஒரே படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார், கணேஷ் கே. பாபு இயக்குகிறர். இதில் அபர்ணா தாஸ் கவின் ஜோடியாக நடிக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
இந்த படம் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகி உள்ளது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுவதால் தமிழில் முக்கிய இடத்தை பிடிக்கும் தனது கனவை டாடா நிறைவேற்றுவார் என்று நம்புகிறார் அபர்ணா தாஸ்.