'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் டிரைலர் நாளை(ஜன., 4) மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இன்று 'வாரிசு' படத்தின் சென்சார் வேலைகள் நடந்தது. அது முடிந்த பின் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டனர். வாரிசு படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடத்துள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் ஓடும் விதமாக ரன்னிங் டைம் உள்ளது.
பொங்கலுக்கு 'வாரிசு' படத்துடன் வெளியாக உள்ள அஜித்தின் 'துணிவு' பட டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யு டியூபில் 40 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'வாரிசு' டிரைலர் வந்தால் அது 'துணிவு ' டிரைலரின் சாதனைகளை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. டிரைலரைப் பொறுத்தவரையில் தமிழ்த் திரைப்படங்களில் விஜய்யின் 'பீஸ்ட்' பட டிரைலர்தான் யு டியூபில் 60 மில்லியன் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'வாரிசு' முறியடிக்கலாம்.
'வாரிசு' டிரைலர் வெளிவந்த பின் அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் மோதல் அதிகமாகலாம்.