கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

தமிழில் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகரான அறிமுகமானவர் தமன். அதன் பிறகு நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவர்களது குடும்பமே திரையிசைக் குடும்பம் என்பதே அதற்குக் காரணம். தமிழில் 2008ம் ஆண்டில் வெளிவந்த 'சிந்தனை செய்' படம் மூலமும், தெலுங்கில் 'மல்லி மல்லி' படம் மூலமும் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார் தமன்.
அதன் பிறகு தமிழில் 'ஈரம், காஞ்சனா, ஒஸ்தி, காதலில் சொதப்புவது எப்படி, தடையறத் தாக்க, சேட்டை, வாலு, தில்லுக்கு துட்டு, ஸ்கெட்ச், மகா முனி, ஈஸ்வரன்,” உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்திற்குப் பிறகு மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறினார்.
இந்தாண்டு பொங்கலுக்கு தமன் இசையமைத்துள்ள இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. தமிழில் விஜய் நடிக்கும் 'வாரிசு', தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு முக்கியமான படங்கள் வருகின்றன. இரண்டு படங்களுமே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இரண்டு படங்களின் பின்னணி இசை வேலைகளில் பரபரப்பாக உள்ளார் தமன்.
இதற்கடுத்து தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், மகேஷ்பாபுவின் 28வது படம் ஆகியவை அவரது இசையில் இந்த வருடத்தின் முக்கிய படங்கள். 'வாரிசு' படத்திற்குப் பிறகு தமிழிலும் அவர் முன்னணிக்கு வருவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.